Aran Sei

ஹுவுவாய் தொலைபேசிகளுக்கு தடை – இந்திய தொலைத்தொடர்பு துறை அறிவிப்பு

ந்தியாவில் சீனாவை சார்ந்த ஹுவுவாய் (HUAWEI ) நிறுவனத்தின் தொலைபேசிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வருகின்ற ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படவிருக்கிறது என்று தொலைத்தொடர்பு துறை உயரதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வருகின்ற ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் கொள்முதல் விதிகளின்(Recruitment Rules) படி இந்தத் தடை விதிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளில் சீனா முதலிடம் – எல்லை பிரச்சனைக்குப் பிறகும் உயர்ந்துள்ள வர்த்தகம்

பாதுகாப்பு காரணங்களுக்காகவும் , இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை அன்று இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய தொலைத்தொடர்பு துறை , ஜூன் 15 2021 க்கு பிறகு நடைமுறைப் படுத்தபடவிருக்கும் கொள்முதல் விதியின் படி அரசு குறிப்பிட்டுள்ள நம்பகத்தன்மை உள்ள தொலைத்தொடர்பு நிறுவங்களின் சாதனங்கள் மட்டுமே
இனி பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ரிலையன்ஸ் தொலைதொடர்பு கோபுரங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை : உயர் நீதிமன்றம் உத்தரவு

ஹுவுவாய் நிறுவனத்தின் தொலைதொடர்பு சாதனங்கள் அரசின் கருப்புபட்டியலில் உள்ளதால் இந்தத் தடை விதிக்க பட இருப்பதாகவும் தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் , லாபத்தை விடவும் அரசின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதே போல அரசின் கருப்புப் பட்டியலில் உள்ள இசட்.டி.இ (ZTE ) என்ற சீன நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட இருக்கிறது.

இந்து கடவுள்களை அவமதித்த குற்றச்சாட்டு : தாண்டவ் படக்குழுவினர் மீது வழக்கு

ஹுவுவாய் மற்றும் இசட்.டி.இ (ZTE ) நிறுவனத்தின் தொலைபேசிகளில் பதிவிறக்கும் செயலிகளில் அந்நிறுவனங்கள் சீனாவிற்காக  மறைமுகமாக உளவு பார்ப்பதாகவும் , இது போன்ற செயல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்றும் தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவை சார்ந்த 150 மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்க்கும் அதிகமாக முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  இதுகுறித்து தெரிவித்துள்ள மூத்த அரசு அதிகாரிகள், ” நாங்கள் முதலீடுகளை ஊக்குவித்தது உண்மை. ஆனால், தொலைதொடர்பு துறையில் ஊக்குவிக்கவில்லை ” என்று கூறியுள்ளனர்.

SOURCE; REUTERS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்