இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா தனது ஆதரவை உறுதி செய்திருப்பதாக, இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார்.
வாக்கெடுப்பு தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இந்திய தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்தியா வல்லரசாக இருப்பதையும், அதன் நிலையையும் மதிப்பதாக ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மலாவி, மான்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்டு மார்ச் 12-ம் தேதி சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மார்ச் 22-23 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு – இந்தியாவின் ஆதரவை கோரும் இலங்கை அதிபர்
மாகாண சபை தேர்தல்களை நடத்துவது, அதிகார பகிர்வு தொடர்பான இலங்கை அரசின் உறுதிப்பாட்டை கோருவது ஆகிய திருத்தங்கள் இறுதி வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
“இலங்கை அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாம் திருத்தத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாண சபைகளும் சிறப்பாகச் செயல்பட உறுதி செய்ய வேண்டும்” என்று இலங்கை அரசுக்கு வரைவு தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், 2022 செப்டம்பர் வரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை இருக்கும் வகையிலும், 2021 செப்டம்பர் மற்றும் 2020 மார்ச் மாதங்களில், இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் தலைவர் அறிக்கை வழங்கும் வகையிலும் வரைவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 13-ம் தேதி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே இந்தியா பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய போது, வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.