Aran Sei

இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கலாச்சார ரீதியான உறவுள்ளது – இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கருத்து

ந்தியாவும் அரபு தேசங்களும் “கலாச்சார ரீதியான உறவை” பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புவதாகவும்” வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் – பாலஸ்தீன பிரச்னைகுறித்து பேசவில்லை என தகவல்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகளின் லீக் (LAS) ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா இவ்வாறு கூறியுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய 2 நாடுகளின் பிரச்சினையில் இந்தியா எப்பொழுதும் இரு தேசங்கள் என்ற தீர்வையே முன்வைக்கிறது என்று ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று இந்த கூட்டத்தில் பங்கேற்றது என்பது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் நெருங்கிய உறவை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் தலையீடு – இந்திய வெளியுறவுத் துறை மௌனம்

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து எவ்வாறு முன்னோக்கிச் செல்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கப் போகும் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் பங்கேற்பார் என்ற ஊகத்தை இது கிளப்பியுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தி நமது பிராந்திய நிலைத்தன்மையை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் இடையே ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் 2020 இல் கையெழுத்தானது. இது ஆபிரகாம் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வழியாக ஐக்கிய அரபு அமீரகம், பல அரபு நாடுகளுடன் சேர்ந்து, இஸ்ரேலுடனும் நட்புறவுகளைப் பேண துவங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளில் அமைப்புகளில் ரஷ்யாவை விமர்சிக்கும் எந்த தீர்மானத்தையும் இதுவரை இந்தியா ஆதரிக்கவில்லை. மேலும் தள்ளுபடி விலையில் அதிகளவிலான எண்ணெய் வழங்குகிறோம் என்ற ரஷ்யாவின் சலுகையைப் பரிசீலிப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.

போர் நின்றவுடன் உக்ரைனில் உயிரிழந்தவரின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் – வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

“உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில், ரஷ்யாவிற்கு ஆதரவு தரும் தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளில் இருந்து பல பிரதிநிதிகள் இந்தியா வருவதாகவும், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உக்ரைன் மீதான மனிதாபிமான தீர்மானங்களில் எதாவது ஒரு தீர்மானத்திற்க்காவது இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன” என்று ஒரு வெளிநாட்டுத் தூதர் ஒருவர் கூறினார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்