எல் சால்வடார், துருக்கி, ஹங்கேரி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் முதன்மையான 10 சர்வாதிகார நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது என உலகளவில் ஜனநாயகம் குறித்து ஆராய்ந்து வரும் வி-டெம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜனநாயகம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என கணிப்புகள் காட்டுவதாக சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிக்கையில் தேர்தல் எதேச்சதிகார நாடு என இந்தியா வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதே நிலைமை நீடித்து வருகிறது என வி-டெம் கூறியுள்ளது.
ரயில்வே டிக்கெட் பெற லஞ்சம் கேட்ட உக்ரைன் அதிகாரிகள் – இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு
2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தபிறகு, இந்தியாவில் ஜனநாயகத்தின் தன்மை தொடர்ந்து குறைந்து வருகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியாவிலும் ஏதேச்சதிகாரத்தன்மை கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
உலக மக்கள் தொகையில் 44 விழுக்காடு மக்களை பாதிக்கும் தேர்தல் எதேச்சதிகாரத்தன்மை இந்தியாவில் பரவலாக உள்ளது என்று ஜனநாயகம் குறித்து ஆராய்ந்து வரும் வி-டெம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.