Aran Sei

காசா தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

காசா பகுதியை இஸ்ரேல் படையினர் 11 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள்குறித்து விசாரணை தொடங்குவதற்காக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் முன்மொழியப்பட்ட தீர்மானம்மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைநகர் ஜெனீவாவில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 47 நாடுகள் கொண்ட மனித உரிமைகள் கவுன்சிலில்,   தீர்மானத்திற்கு எதிராக 9 நாடுகளும், ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாருண் தேஜ்பால் விடுதலை – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், சீனா மற்றும் ரஷ்யா ஆதரவளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெருசேலம் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பிராந்தியத்தில், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வது குறித்த தீர்மானம் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைப்பட்டுள்ளதாக, ஐநா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கலைஞர் பிறந்த தினத்தில் இஸ்லாமிய கைதிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

சமீபத்திய தாக்குதலின்போது மீறப்பட்ட சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கை சர்வதேச விசாரணை ஆணையம் நிறுவப்பட்டுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே, “காசாவில் இஸ்ரேலுக்கும், ஆயுத குழுவிற்கு இடையிலான போரை முடிவிற்கு கொண்டு வர சர்வதேச சமூகம் மற்றும் அருகில் இருக்கும் நாடுகள் எடுத்த ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா வரவேற்கிறது.

‘சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகள் பேச்சுரிமைக்கு எதிரானது’: கருத்துக் கூறிய ட்விட்டர் – கண்டித்த ஒன்றிய அரசு

சமீபத்திய நிகழ்வுகள் இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்குவதற்கான அவசியத்தை மீண்டும் அடிக்கோடிட்டுள்ளன. இது பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் சமாதனமாக அருகருகே வாழும் இரண்டு அரசுகள் நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்று ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.

Source : PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்