Aran Sei

மியான்மர் மீதான ஐ.நா பொது சபையின் தீர்மானம் – தீர்மானத்தைப் புறக்கணித்த இந்தியா.

ந்தியாவின் கருத்துகள் பிரதிபலிக்கவில்ல என்பதால் மியான்மர் மீதான ஐநா பொது சபையின் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. இப்பிரச்னையை அமைதியான முறையில் சர்வதேச சமூகம் தீர்க்க முயற்சிப்பதால், மியான்மரின் அண்டை சம்பந்தப்பட்ட ’ஆலோசனை மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை’ முக்கியானது எனத் தெரிவித்துள்ளது.

நேற்று (ஜூன் 18) ஐநா பொதுச் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நவம்பர் 8, 2020 ஆம் தேதி பொது மக்கள் சுதந்திரமாக வெளிப்படுத்திய தேர்தல் முடிவுகளை ஆயுதப் படைகள் மதிக்க வேண்டும். அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மியான்மர் மக்களின் அனைத்து மனித உரிமைகளையும் மதிக்க வேண்டும் மற்றும் மியான்மரின் தொடர்ச்சியான ஜனநாயக மாற்றத்தை அனுமதிக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகள் முன்மொழியப்பட்டிருந்தன.

மேலும், ஜனநாயக முறையில் தேர்ந்தேடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை திறப்பது மற்றும் ஆயுதப் படைகள் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களையும் உள்ளடக்கிய மக்களின் விருப்பத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் ஒரு முழுமையான குடிமையியல் அரசாங்கத்தீன் கீழ் நாட்டைக் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.

தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகளும், தீர்மானத்திற்கு எதிராக பெலாரஸும் வாக்களித்தன. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பை புறக்கணித்தது தொடர்பாக இந்தியா அளித்துள்ள விளக்கத்தில், ”இன்று முன்மொழியப்பட்டிருக்கும் வரைவில், எங்கள் கருத்துக்கள் பிரதிபலிக்கவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம். சர்வதேச சமூகம் இந்தப் பிரச்னையை  அமைதியான முறையில் தீர்க்க முயற்சிக்கும்போது, அண்டை நாடுகள் மற்றும் பிராந்தியம் சம்பந்தப்பட்ட ‘ஆலோசனை மற்றும் ஆக்கபூர்வமான’ அணுகுமுறை முக்கியமானது உள்ளது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த வரும்புகிறோம்.

”அனைத்து அண்டை நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் ஆதரவு இல்லாதது, அவசர நடவடிக்கை எடுக்க தேர்வு செய்பவர்களுக்கு ஒரு கண் திறக்க இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

’மியான்மரில் ஜனநாயக வழிவகையை வலுப்படுத்துவதற்கான  நமது கூட்டு முயற்சிகளுக்கு உதவுவதற்கு’ இது உகந்தது. எனவே நாங்கள் வாக்களிக்காமல் இருக்க வேண்டிய நிர்பந்ததில் உள்ளோம் என்று இந்தியா கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்