Aran Sei

குடியரசு தின மோதல் தொடர்பாகச் சுயாதீன விசாரணை வேண்டும் – மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக, சுயாதீன விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டம் அதன் கடமையை செய்யும் எனப் பிரதமர் கூறியிருப்பதால், இதில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

”அரசாங்கம் இதை விசாரித்து வருகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சட்டம் அதன் கடமையை செய்யும் எனப் பிரதமர் ஊடகங்களிடம் தெரிவித்ததை பார்த்தோம். இந்த நிலையில் இதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை” என மனுதாரர்களிடம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்ததாக, அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்கர் பரிஷத் 2.0: அலிகர் முஸ்லீம் பல்கலை., முன்னாள் மாணவர் கைது – மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு

விசாரணை ஒருதலை பட்சமாக இருக்கும் என மனுதாரர் ஒருவர் தெரிவித்ததற்கு, ”விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கும் என நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள், இரு தரப்பும் விசாரிக்கப்படும்” எனப் பாப்டே கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடப்பது மனித உரிமை மீறல் – மியா காலிஃபா கண்டனம்

மனுதாரர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற அனுமதியளித்திருப்பதோடு, ஏதேனும் பிரச்னை இருந்தால் உள்துறை அமைச்சகத்தை அணுகுமாறு நீதிமன்ற தெரிவித்துள்ளதாக, அதில் குறிப்பிடப்படுள்ளது.

வழக்கறிஞர் விஷால் திவாரி, தாக்கல் செய்யத மனுவில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற மோதல்கள்பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கக் கோரியிருந்ததாகவும், மற்றொரு வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, ’தீவிரவாதிகள்’ என ஊடகங்கள் அழைப்பதை நிறுத்த, நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரியிருந்ததாகவும், தி இந்து கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்