மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அரசியலமைப்பின் 174 வது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலச் சட்டசபையைக் காலவரையின்றி ஒத்திவைப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க சபாநாயகர் ஆளுநரின் அனுமதி பெற்ற பிறகே இனி சட்டசபையைக் கூட்ட முடியும்
மேற்குவங்கத்தில் நடந்து வரும் உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த கூட்டத் தொடரில் மாநில அரசின் செயல்பாடுகளில் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அடிக்கடி தலையிடுவதாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வருவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆலோசித்து வந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஹிஜாப்: மத உணர்வுகளுக்கும் அரசியலமைப்புக்கும் மதிப்பளியுங்கள் – ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
மாநிலங்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரான சுகேந்து சேகர் ரே மாநிலங்களவை விதி 170 இன் கீழ் மேற்கு வங்க ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தன்கரை நீக்குமாறு குடிஅரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
மேற்குவங்க அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் ஆளுநர் ஜக்தீப் தன்கர் குறுக்கீடு செய்வதோடு, அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததற்காக ட்விட்டரில் ஆளுநரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிளாக் செய்திருந்தார்.
Source : indianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.