Aran Sei

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்” – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

டகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையை அடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை: இந்த சோதனையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தகவல்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “பாஜகவுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் பின்னால் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை நிறுத்துவார்கள். நாட்டின் ஜனநாயக அமைப்பை நசுக்கி, ஒட்டுமொத்த நாட்டையும் தனது அடிமையாக மாற்ற பாஜக விரும்புகிறதா? ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண், அதன் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பாகும்.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆளும் பாஜக மீது கடுமையான அரசியல் விவாதத்தை முன்வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியது. இது நடைபெற்ற சில வாரங்களில் இவ்வாறான சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது” என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்நிலையில்,பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்