Aran Sei

வரி ஏய்ப்பு செய்தாரா பால் தினகரன்? – வருமான வரித்துறை பிடியில் சிக்கியுள்ள “இயேசு அழைக்கிறார்” குழுமம்

”இயேசு அழைக்கிறார்” குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ”இயேசு அழைக்கிறார்” என்ற கிறிஸ்துவ ஊழியத்தை, மதபோதகர் பால் தினகரன் நடத்தி வருகிறார். அதன் தலைவராகவும், இயேசு அழைக்கிறாருக்குச் சொந்தமான காருண்யா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இயேசு அழைக்கிறார் குழுமத்திற்கு பெறப்பட்ட நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இன்று காலை முதல் தமிழகத்தில், பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருக்கலைப்பு உரிமைக்கான சட்டம் – அர்ஜென்டினாவில் நிறைவேற்றம்

தமிழகம் முழுவதும் இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கோயம்புத்தூரில் உள்ள பால் தினகரனுக்குச் சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா கிறிஸ்தவப் பள்ளி, சென்னை அடையாறில் உள்ள `இயேசு அழைக்கிறார்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை பாரிமுனையில் உள்ள அலுவலகம், பால் தினகரனின் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் அதன் உண்மையான சாரத்தை இழந்துவிட்டது – பாதிரியார் ஜே.பெலிக்ஸ் ராஜ்

இயேசு அழைக்கிறார் பெரிய குழுமம் என்பதால், சோதனையின் முடிவில் தான் இதைப் பற்றி தெரிவிக்க முடியும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுவாமி அக்னிவேஷ் – மக்களுக்காக வாழ்ந்த சந்நியாசி

இயேசு அழைக்கிறார் நிறுவனம், பல்வேறு திட்டங்களின் வழியாக, உலகெங்கும் வாழும் மக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று வருவதாக, அதன் இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்