Aran Sei

உயிரோடு இல்லாதவர்களுக்குக் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழ் – ஒன்றிய அரசு தரும் வினோத விளக்கம்

Image Credit : scroll.in

பிரதமர் மோடியின் பிறந்தநாளன்று அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கணக்கு காட்டுவதற்காக உயிரோடு இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஒன்றிய அரசு தரப்பில் இருந்து வினோதமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளில், நாடு முழுவதும் உள்ள 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இதில் பல மாநிலங்களில் உயிரிழந்தவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் தீண்டாமை கடைபிடித்த பள்ளி தலைமையாசிரியர் – பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம்

இதற்குப் பதிலளித்துள்ள ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், ”இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு நபர் உயிருடன் இருக்கும்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்துள்ளார். துரதிருஷ்டவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நாளில் உயிரிழந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “தடுப்பூசி செலுத்துபவர், உயிரிழந்தவரின் பெயருக்கு நேராக இருந்த பட்டனை தவறுதலாக அழுத்தியதால் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. இது பின்னர் சரி செய்யப்பட்டுவிட்டது” என அவர் கூறியுள்ளார்.

Source : NDTV

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்