Aran Sei

உத்தரபிரதேசத்தில் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான மசூதி – உரிய நடவடிக்க எடுக்க வக்பு வாரியம் அரசிடம் வேண்டுகோள்

த்தரபிரதேச மாநிலம் ராம்சனிஹி காட் தாலுக்காவிலுள்ள பனிகடா கிராமப்பகுதியிலுள்ள கரீப் நவாஸ் மசூதியை அம்மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாகக் கட்டப்ட்ட கட்டுமானம் என்றுக்கூறி இடித்துள்ளதாக உத்தரபிரதேச மாநில சன்னி மத்திய வக்பு வாரியம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘விடுதலைக்காக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குக் காத்திருக்கும் இந்தியர்கள்’ – பொருளாதார வல்லுநர் கெளசிக் பாசு கருத்து

இது குறித்து நேற்றைய தினம் தெரிவித்துள்ள வக்பு வாரியம், மசூதி சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுள்ளதாகவும், இடித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளை உயர்மட்டக்குழு விசாரணை செய்ய வேண்டுமெனவும் சன்னி வக்பு வாரியம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

மசூதியை இடித்தது தொடர்பாக தெரிவித்த வக்பு வாரியத் தலைவர் ஜூபர் பருக்கீ, “கடந்த ஏப்ரல் 24,2021  அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 100 வருடப்பழமையான மசூதி இடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக, அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்க எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

கடந்த ஏப்ரல் 24 அன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், மே 30 வரை மாவட்டநீதிமன்றம், உயர்நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள் வழங்கிய இடிப்பு (அ)  அகற்றத் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்