Aran Sei

உத்தரப் பிரதேசம்: ஹோலி பண்டிகையின்போது மசூதிமீது கலர் பொடி வீச்சு

த்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஹோலி பண்டிகை ஊர்வலத்தின்போது மசூதியின்மீது சிலர் வண்ணப் பொடிகளை வீசியதை அடுத்து கல் வீச்சு சம்பவம் நடந்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று (மார்ச் 18), சம்பல் மாவட்டத்தில் நடந்த ஹோலி பண்டிகை ஊர்வலத்தின்போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பல் கோட்வாலியில் உள்ள கக்கு சராய் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சம்பல் காவல் கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

விவசாய சட்ட நகல்களை எரியூட்டி ஹோலி கொண்டாடிய விவசாயிகள் – இந்திய உணவு கழகத்தை முற்றுகையிட திட்டம்

சில சமூக விரோதிகள் மசூதி மீது வண்ணப் பொடிகளை வீசியதை அடுத்து, கல் வீச்சு சம்பவம் நடந்ததாகவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஊர்வலம் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அம்மசூதியை உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் சுத்தம் செய்தனர் என்றும் சம்பவம் நடந்த அப்பகுதியில் அமைதி நிலவுகிறது என்றும் காவல் கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்