Aran Sei

உத்தரபிரதேசத்தில் அகிலேஷின் தந்தை முலாயம் சிங்தான் பாஜக பி டீம், பகுஜன் சமாஜ் கட்சி அல்ல – மாயாவதி பதிலடி

த்தரபிரதேசத்தில் பாஜகவின்  ‘பி’ டீமாக பகுஜன் சமாஜ் கட்சி செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ள மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வின் தந்தை முலாயம் சிங் யாதவ் தான் பாஜகவின் பி டீம் என்று கூறியுள்ளார்.

உ.பி தேர்தல்: சமாஜ்வாதிக்கு பயந்தே பி.எஸ்.பி., ஆதரவாளர்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர் – மாயாவதி

சமாஜ்வாதி கட்சியில் இருந்து முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவை பாஜகவிற்கு வேலை செய்ய அனுப்பியுள்ள அவர்கள் தான் பாஜக ‘பி’ டீம் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த போது அம்பேத்கரின் பெயரில் இருந்த நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் பெயர்களை மாற்றியுள்ளார். இது மிக அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது. இதனால் ஒருபோதும் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்பேத்கரியவாதிகள் அகிலேஷ் யாதவை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேசத்தில் எவ்வளவு இடங்களை கைப்பற்றும் தெரியவில்லை, ஆனால் அதன் வாக்குவங்கியை அவர்கள் தக்க வைத்துள்ளார்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு, மாயாவதி அவரை பாராட்டியிருந்தார்.

உ.பி தேர்தல்: பாஜகவின் வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பாரத ரத்னா விருது வழங்குக – சஞ்சய் ராவத் கிண்டல்

இதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சிதான் பாஜகவின் பி டீம் என எதிர்க்கட்சிகள் அழைக்க ஆரம்பித்தன. 1995, 1997 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில், பாஜக ஆதரவுடன் உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்