Aran Sei

‘இந்தியாவில் பெரும்பான்மையான படுக்கை வசதியுள்ள மருத்துவமனைகள் நகர்புறத்திலேயே உள்ளன’ – இலரா நிறுவன ஆய்வில் தகவல்

Image Credits: DNA India

ந்தியாவில் பெரும்பான்மையாக 69 சதவீத படுக்கை வசதி கொண்ட  மருத்துவமனைகள்  நகர்புறத்திலேயே உள்ளது என்று இலரா தொழிநுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்நாடகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தடுப்பாடு – பேருந்துகளை படுக்கைகளாக மாற்றிய அரசு

மேலும், ‘இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மருத்துவ வசதிகள்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவிலேயே அதிக மருத்துவ வசதிகள் கொண்ட நகரம் புனே என்றும் ஆயிரம் நபர்களுக்கு 3.5 மருத்துவமனைகள் வீதம் படுக்கை வசதி கொண்டுள்ளது என்றும் அந்த ஆய்வு தெரியவந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தியில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவித்துள்ளது.

மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படும் – சு. வெங்கடேசன் எச்சரிக்கை

மேலும், வளர்ந்த நாடுகளாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10-லிருந்து 18 சதவீதம் வரை மருத்துவ கட்டமைப்பிற்கு செலவிடுவதாகவும் , ஆனால், இந்தியா வெறும் 3.5 சதவீதம் மட்டுமே செலவிட்டுவருவதாகவும் ஆய்வின் வழியாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வானது படுக்கை வசதி, காற்று வசதி, நீரின் தரம், சுகாதாரம் மற்றும் வாழ்வியல் தரம் ஆகிவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்