உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் பகுதியில், பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள ஆற்றின் கரைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிற இடங்களில் ஏற்பட்டுள்ள மண்அரிப்பால் சடலங்கள் ஆற்றில் மிதக்கத் தொடங்கியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த காணொளி மற்றும் படங்களை அப்பகுதி பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளதாகவும், அதிகாரிகள் மண்அரிப்பால் ஆற்றில் மிதக்கும் சடலங்களை அகற்றி வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 23 அன்று, வெளியான புகைப்படம் ஒன்றில் வெள்ளை கையுறை அணிந்த நிலையில், ஆரஞ்சு நிற பையில் மூடப்பட்ட நிலையில் சடலம் ஆற்றில் மிதந்து வருவதை பிரயாக்ராஜ் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தி தெரிவிக்கிறது.
இது போன்ற இன்னொரு காணொளியில், இதே போன்றதொரு சடலத்தை அதிகாரிகள் ஆற்றிலிருந்து மீண்டும் மண்ணுக்குள் புதைக்கும் காட்சி பதிவாகியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பிரயாக்ராஜ் மாநகராட்சியின் மண்டல அதிகாரி நிராஜ் குமார் சிங், கடந்த 24 மணி நேரத்தில் 40 சடலங்களை தகனம் செய்துள்ளதாகக் கூறினார் என்று என்.டி.டி.வி செய்தியில் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.