உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி பகுதியின் சிசாஉர்ஹா கிராமத்தில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்வதற்கு அஞ்சியதால் சிலர் ஆற்றில் குதித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிசாஉர்ஹா கிராமத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்ற பொது அங்கிருந்த சிலர் தடுப்பு மருந்தை நஞ்சு ஊசி என்றுக் கூறியதை நம்பி அருகில் இருந்த ஆற்றில் குதித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அமர்வு நீதிபதி ராஜிவ் குமார் சுக்லா, இந்தச் சம்பவம் கடந்த மே 22 அன்று நடந்ததாக தெரிவித்துள்ளதாகவும், தடுப்பு மருந்து குறித்து தெரிவித்ததும் 18 பேர் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள மக்கள் எவ்வாறு தயக்கம் காட்டுகின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமென அந்த செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.