Aran Sei

உ.பி. தேர்தல்:  என் மகனை பாஜக வேட்பாளராக நிறுத்தினால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் – ரீடா பகுணா ஜோஷி

த்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய வரும் வேளையில் பாஜகவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது பரப்பாகியது. இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் லக்னோ கண்டோன்மென்ட் தொகுதிக்கு என் மகனை பாஜக உறுப்பினராக நிறுத்துவதற்காக நான் என்பது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கிறேன் என்று அலகாபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ரீடா பகுணா ஜோஷி தெரிவித்திருந்தார்.

தனது மகன் லக்னோ காண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளதால் அவருக்கு அங்கேயே சட்டமன்ற உறுப்பினராக நிறுத்த வேண்டும் என்று உத்திரபிரதேசத்தின் பாஜக பொறுப்பாளரான தர்மேந்திர பிரதானிடம் ஏற்கனவே ஜோஷி முறையிட்டுள்ளார்.

“என் மகன் மயங்க் ஜோஷி 2009 ஆம் ஆண்டு முதல் அரசியலில் பயணித்து வருகிறார். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சீட்டு வழங்கக் கட்சி முடிவு செய்திருந்தால், என் மகனுக்கு சீட்டு கிடைக்க வேண்டுமென்றால், நான் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ஜோஷி” ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச தேர்தலுக்கு முன்பாக ஜோஷி பாஜகவை விட்டு விலகுவதாகச் செய்திகள் பரவி வருவதால், ஜோஷி யின் கருத்துக்கள் அவரது மகனுக்குச் சீட்டைப் பெறுவதற்கான அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

Source: The hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்