Aran Sei

உ.பி., : ‘அலிகார் நகர சாலைகளில் ஹனுமான் சாலிசா ஒலிப்பரப்ப அனுமதியுங்கள்’ – ஏபிவிபி கோரிக்கை

த்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள 21 முக்கிய சாலைகளில் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) ஒலிப்பரப்புவதற்கு ஒலிபெருக்கிகள் பொருத்த அம்மாவட்ட அதிகாரிகளிடம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

இது குறித்து, நேற்று (ஏப்ரல் 13) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ராகேஷ் படேல், “ஏபிவிபி அமைப்பிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான விண்ணப்பத்தைப் பெற்றுள்ளது. இது குறித்த சட்டரீதியிலான வழிமுறைகள் குறித்து விசாரித்து வருகிறோம். அதற்கேற்ப முடிவெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

இதற்கிடையில், ஏபிவிபி அமைப்பின் முன்னாள் மாநிலச் செயலர் பல்தேவ் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம். எங்களுக்கு தேவையான அனுமதி கிடைக்கவில்லை என்றால், எங்களுடைய எதிர்கால திட்டம் குறித்து நாங்கள் முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஒலிபெருக்கிகள் மற்றும் அவற்றை நிறுவுவதற்கான உபகரணங்களை வாங்குவதற்கு, அலிகார் நகரின் பல்வேறு பகுதிகளில் சில வலதுசாரி அமைப்புகள் நன்கொடை வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.

Source: PTI

அசிங்கப்பட்ட எச்.ராஜா | நடந்தது என்ன?

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்