Aran Sei

ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் – தமிழக அரசு அறிவிப்பு

ருத்துவ ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேரைப் பணி நிரந்திரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளையுடன்  (மே 5) அவர்களது ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், ”பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும், மே 10 ஆம் தேதிக்குள் சென்னையில் பணியில் சேர வேண்டும். பின்னர் அவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளூர் ஷாநவாசுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் – கைது செய்யக்கோரி காவல்துறையில் புகார்

2015 – 16 ஆம் ஆண்டில் மருத்துவசேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (Medical Services Recruitment Board)  தேர்வில் தேர்ச்சி பெற்று ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்தவர்களுக்கு இந்தப் பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்