‘ராஸ்ட்ரியா காம்தேனு ஆயோக்’ என்று அழைக்கப்படும் பசு நலனுக்காக அமைக்கப்பட்ட அரசு அமைப்பு, பிப்ரவரி 25-ம் தேதி நாடு முழுவதும் இனைய வழி தேர்வை நடத்த உள்ளது. இது ‘பசுக்கள்’ எனும் தலைப்பில் நடக்குள்ளது.
காம்தேனு கௌ-விஜியன் பிரச்சார்-பிரசார் தேர்வு என்று அழைக்கப்படும் இந்தத் தேர்வில் நான்கு வகை தேர்வாளர்களுக்கு தனித்தனி வினா தாள்கள் இருக்கும். அவை கல்வித் தகுதிக்கேற்ப பிரிக்கப்படுகின்றன – ஆரம்ப நிலை பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, மற்றும் பொது மக்களுக்குத் தனித்தனி வினா தாள்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தாள் ஒரு சான்றிதழ் வழங்கப்படும்.
“மத்திய கல்வி அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், அனைத்து மாநிலங்களின் கௌ சேவா ஆயோக்கின் தலைவர்கள், அனைத்து மாநிலங்களின் மாவட்ட கல்வி அதிகாரிகள், அனைத்து பள்ளிகளின் அதிபர்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பசு நன்கொடையாளர்கள் இந்தத் தேர்வைப் பெருமளவில் சந்திப்பார்கள்” என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் இது நீண்ட நாட்களாகப் பள்ளிகளுக்குச் செல்லாமல் இருந்த மாணவர்களுக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் வேளையில் இது அவர்களுக்குக் கூடுதல் சுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு ஆயத்தம் ஆவதற்காக ‘ராஸ்ட்ரியா காம்தேனு ஆயோக் அமைப்பு ஒரு புத்தகத்தைத் தயாரித்துள்ளது. அந்தப் புத்தகம் நாட்டு மாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களுக்கு இடையே உள்ள வித்யாசத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்புத்தகம் நட்டு பசுக்களிலிருந்து கிடைக்கும் பொருட்களால் நன்மை ஏற்படும் என்று நிறுவ முயற்சிக்கிறது.
“அதிக அளவில் பால் உற்பத்தியானாலும் அதன் தரம் குறைவாக இருக்கும்” என்று ஜெர்சி மட்டை பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மாட்டுப் பாலின் நிறம் “வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அதில் தங்கத்தின் தடயங்கள் உள்ளன” (இது ஜெர்சி பசுவிடம் இல்லை) என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பசுக்கள் சுகாதாரத்தை பராமரிக்கின்றன, “அழுக்கான இடங்களில் இருக்கக்கூடாது என்கிற புத்திசாலித்தனம் இவற்றுக்கு உண்டு” என்று பாடத்திட்டம் கூறுகிறது. “அதே நேரத்தில் ஜெர்சி மாடு சோம்பேறி தனமாக உள்ளது” என்றும் “நோய்களுக்கு ஆளாகிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 38 புள்ளி வித்யாசங்கள் கூறப்பட்டுள்ளன. “எந்தவொரு அறியப்படாத நபரும் நட்டு மாட்டுக்கு அருகில் வரும்போதெல்லாம், அது உடனடியாக நிற்கும்” போன்ற மிகவும் விசித்திரமான வரிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு மாடுகளுக்கு உணர்ச்சிகள் இருக்காது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தை உருவாக்கியவர்கள் அறிவியலில் ஆர்வமுள்ளவர்களைத் தவிர்த்து வேறு யாரும் தவறை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்துள்ளார்கள் என்று தி வயர் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.