Aran Sei

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் மோதி 8 யானைகள் மரணம் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்

கோவை – பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் கடந்த 2016 முதல் தற்போது வரை 8 யானைகள் ரயில் மோதியதில் காயமடைந்து இறந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கோவை – பாலக்காடு வழிதடத்தில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது குறித்து விண்ணப்பித்திருந்த மனுவிற்கு பதிலளித்துள்ள பாலக்காடு கோட்ட மூத்த பொறியாளர் ஆனந்தராமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யானை வழித்தடம் : “காட்டுக்குள் ரிசார்ட்டுகளுக்கு என்ன வேலை?” – உச்சநீதி மன்றம்

மேலும், அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் ‘பி’ லைன் ரயில் தடத்தை வனப்பகுதி குறைவாக உள்ள ‘ஏ’ லைன் அருகில் மாற்றும் திட்டம் ஏதுமில்லை என்றும் இந்த தகவலின் வழியாக தெரியவந்துள்ளது.

அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் ‘பி’ லைன் ரயில் தடம் யானைகள் அதிகம் கடக்கக்கூடிய பகுதியாகும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 6 கிமீ தூரத்திற்கு தண்டவாளத்தின் இருபுறமும் சீர் செய்வதற்கு 2கோடியே 43 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டு அகலப்படுத்துவதற்கு 5 கிமீ தூரத்திற்கு ஒரு கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 7.5 கிமீ தூரத்திற்கு அகலப்படுத்துவதற்கு 3 கோடியே 10 லட்சம் அளவிற்கு ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கோட்டப்பொறியாளர் ஆனந்தராமன் தெரிவித்துள்ளார்

அந்தமான் தீவில் அமையவிருக்கும் மத்திய அரசின் வர்த்தக மண்டலம் – காடுகள் அழியுமென்று நிபுனர்குழு எதிர்ப்பு

மேலும்,ரயில் யானைகள் மீது மோதாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டப்பொறியாளர் ஆனந்தராமன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் கூறியுள்ளார்

இதுகுறித்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், “இரவு நேரத்தில் பி லைனில் ரயில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். பி லைனை ஏ லைன் அருகே அமைப்பது மட்டும் தான் நிரந்தர தீர்வு. என்ஜின் டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வேக வரம்பினை முறையாக கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். மேலும், குறைந்த பட்சம் ஒரு கிமீ தூரம் டிரைவர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் இருபுறமும் உள்ள செடிகொடிகள் வெட்டப்பட வேண்டும். ரயில் தூரத்தில் வரும்போதே யானைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் சென்சார்கள் அமைக்கப்பட்டு ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நடைமுறைபடுத்தப்பட்டால் மட்டுமே ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

அழிந்துவரும் அலையாத்திக் காடுகள் – பாதுகாக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

மேலும் , ரயில்வே நிர்வாகம் யானை பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

source: பூவுலகின் நண்பர்கள்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்