ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சுனில் குமார் தன்வந்தா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பலத்த காவல்துறை பாதுகாப்போடு குதிரையில் திருமண ஊர்வலம் சென்றுள்ளார். இந்த பகுதியில் உள்ள பட்டியல் சாதியினர் தங்களது திருமண ஊர்வலங்களில் இதற்கு முன்னரே குதிரையில் சவாரி செய்ய முயன்ற பொது ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை சந்தித்திருக்கின்றனர்.
குஜராத்தில் குதிரை ஏறியதற்காக தாக்கப்பட்ட தலித் மணமகன் – 28 பேர் மீது வழக்குப்பதிவு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த திருமண ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்று துணை காவல் ஆணையர் வித்யா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பிப்பிரவரி 7ஆம் தேதி குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தலித் மணமகனைக் குதிரையில் ஏற விடாமல் தடுக்க முயன்றதோடு, திருமண ஊர்வலத்தின் மீது கற்களை வீசியது தொடர்பாக, கிராம தலைவர் உட்பட 28 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.