Aran Sei

பத்திரிகையாளர் ஃபஹத் ஷாமீது பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு – பிரிவினையை ஊக்குவிப்பதாக காஷ்மீர் காவல்துறை குற்றச்சாட்டு

Credit : The Wire

காஷ்மீரை சேர்த்த பத்திரிகையாளர் ஃபஹத் ஷா மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஃபஹத் ஷா ஒரு தந்திரமான நபர் என குற்றம்சாட்டியுள்ள காவல்துறையினர், அவர் குழந்தை பருவத்திலிருந்தே தீவிரமாக தனது சித்தாந்தத்தை பின்பற்றி வருபவர் என்று தெரிவித்துள்ளனர்.

அவர் பிரிவினையை ஊக்குவிப்பதற்காக எல்லை தாண்டிய தேச விரோத கும்பலுடன் இணைந்து செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் செய்தி ஊடகமான ’தி காஷ்மீர் வாலா’வின் ஆசிரியரான ஃபஹத் ஷா, பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் பிப்ரவரி 4ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத் ஷாவுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை– விடுதலையான சிறிதுநேரத்தில் மீண்டும் கைது

கைது செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் நீதிமன்ற பிணை வழங்கிய நிலையில், மூன்றாவது முறையாக ஃபஹத் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.

ஃபஹத் ஷாவிற்கு எதிரான ஆவணங்களை மூத்த காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் பல்வால் சமர்பித்ததைத் அடுத்து, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஷாவை சிறையில் அடைக்கும் உத்தரவை ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி அய்ஜாஸ் அப்பாஸ் பிறப்பித்துள்ளார்.

Source : The Wire

தொடர்புடைய பதவுகள்: 

அடக்குமுறைக்கு உள்ளாகும் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா – உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்

உண்மையின் பக்கம் நிற்பது தேசவிரோதமா? – காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத்தின் கைதுக்கு மெஹபூபா முப்தி கண்டனம்

‘ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மீதான அரசின் அடக்குமுறை’ – ஐநா பிரதிநிதி கண்டனம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்