பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து சமூகத்தைச் சீரழிக்கின்றனர் என உத்திரகண்ட் மாநில முதலமைச்சர் திராத் சிங் ராவத் கருத்திற்கு பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சீருடையை அணிந்திருக்கும் புகைப்படத்தை, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரியங்கா காந்தி, ”அடகடவுளே அவர்களுது முழங்கால்கள் தெரிகிறன” எனப் பதிவிட்டுள்ளார்.
Oh my God!!! Their knees are showing 😱😱😱 #RippedJeansTwitter pic.twitter.com/wWqDuccZkq
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 18, 2021
செவ்வாய்க்கிழமை ( மார்ச் 17) உத்திரகண்ட மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில் கலந்துகொண்ட திராத் சிங் ராவத். கிழந்த ஜீன்ஸ் அணிந்திருந்த பெண் தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
“இந்த வகையான பெண் வெளியே சென்று சமூகத்தில் இருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றால், நாம் இந்தச் சமூகத்திற்கும், நம் குழந்தைகளுக்கும் என்ன வகையான செய்தியைக் கொடுக்க விரும்புகிறோம்? நாம் என்ன செய்கிறோம். நம் குழந்தைகள் எதைப் பின்பற்ற வேண்டும் என்பது வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது. வீட்டில் உள்ளவர்களால் சரியான கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்ளும் ஒரு குழந்தை, எவ்வளவு நவீனமாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு போதும் தோல்வி அடையாது” என்று திராத் சிங் தெரிவித்திருந்தார்.
உத்திரகண்ட் முதலமைச்சரின் இந்தக் கருத்துக்குச் சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவரது மனைவி ராஷ்மி தியாகி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள காணொலியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.