Aran Sei

புர்காவை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்ட பெண் – மத்திய பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு

த்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் பெண்ணின் புர்காவை அகற்ற கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார். அக்காணொளி இணையத்தில் பரவியுள்ளது.

நேற்று(அக்டோபர் 16), இஸ்லாம் நகரில் நடந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 151-ன் கீழ் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்காணொளியில், படம்பிடிப்பவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை நோக்கி, அப்பெண்ணின் செயல் சமூகத்தை அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்கிறார். சில பெண்கள் அவளுடைய முகத்தைக் காட்டும்படி வற்புறுத்துவதையும் அக்காணொளியில் காணலாம்.

“ஒரு இளைஞரும் அப்பெண்ணும் நேற்று(அக்டோபர் 16) பிற்பகல் இஸ்லாம் நகருக்கு வந்துள்ளனர். சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெண்ணிடம் புர்காவைக் கழற்றி முகத்தைக் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்த ஆணை இந்து என்றும் அப்பெண் இஸ்லாமியர் என்றும் அவர்கள் நினைத்து இவ்வாறு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது”என்று இன்கெடி காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்எஸ் வர்மா பிடிஐயிடம் கூறியுள்ளார்.

மேலும், “இதுதொடர்பாக இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், காணொளியில் காணப்பட்ட இரண்டு ஆண்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 151-ன் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயலை மீண்டும் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்