பிப்பிரவரி 23 அன்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பாஹ்ரி கிராம பஞ்சாயத்து தொடர்பான தகவல்களைக் கேட்டதற்காக ஷஷிகாந்த் ஜாதவ் என்பவரைத் தாக்கி சிறுநீர் குடிக்க வற்புறுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் எலும்பு முறிவு உட்பட பலத்த காயமடைந்த ஷஷிகாந்த் ஜாதவ், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஹ்ரி கிராம பஞ்சாயத்து தொடர்பான தகவல்களைக் கேட்டது அந்த பஞ்சாயத்தில் உள்ள சிலரை ஆத்திரமடையச் செய்தது என்றும், மேலும் என் கணவர் பட்டியல் சாதியினர் என்பதாலும் அவரை தாக்கி, சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தினர் என்றும் அவரது மனைவி ரேணு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஷஷிகாந்த் ஜாதவை தாக்கியவர்கள் அவர்களது ஷூவில் இருந்து சிறுநீரைக் குடிக்க வற்புறுத்தியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாகக் கொலை முயற்சி மற்றும் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.