Aran Sei

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரால் மிரட்டப்பட்ட மருத்துவர் – பதவி விலகுவதாக அறிவிப்பு

த்திய பிரதேசத்தில் கொரனோ பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவரை காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மிரட்டியதை அடுத்து அவர் பதிவிலகுவதாக அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஜேபி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டவர் இறந்ததையடுத்து அவருடன் வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்போது பணியில் இருந்த மூத்த மருத்துவர் யோகேந்திர ஸ்ரீவஸ்தவ்வை மிரட்டியதால் அவர் பதிவிலகி இருக்கிறார்.

திரிபுராவில் பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தலைமைச் செயலாளர்: நோட்டீஸ் அனுப்பிய இந்திய பிரஸ் கவுன்சில்  

மருத்துவர் யோகேந்திர ஸ்ரீவஸ்தவ்வை மிரட்டியவர்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர் பி.சி.சர்மாவும் அவரது ஆதரவாளர் யோகேந்திர சவுகானும் ஆவர்.

இந்நிலையில், மிரட்டலை அடுத்து மருத்துவர் யோகேந்திர ஸ்ரீவஸ்தவ் இன்று காலை பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக மிரட்டலால் வேட்புமனுவை திரும்ப பெற்ற சுயேச்சை வேட்பாளர் – உயிருக்கு ஆபத்து என ராஜஸ்தான் முதல்வருக்கு கடிதம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அம்மருத்துவமனையின் மருத்துவர் ரித்திகா பாண்டே, “அவர்கள் (காங்கிரஸ்) எங்களை எவ்வாறு நடத்துகிறார்கள். கொரோனா பணியில் கடந்த ஒரு வருடமாக இரவு பகல் பாராது உழைத்த மருத்துவர் யோகேந்திர ஸ்ரீவஸ்தவ் அவர்களது மிரட்டலுக்கு பின் பணிவிலகியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,”இது மிகவும் வெட்கக்கேடானது. எங்கள் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொள்ள எந்த நபருக்கும் உரிமை இல்லை. மருத்துவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும், அவர்களின் மன உறுதியை உயர்த்த வேண்டும். அதனால், அவர்கள் சமூகத்திற்கு சிறந்த முறையில் சேவை செய்ய இயலும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்