Aran Sei

பள்ளத்தாக்கில் ஆயுதப் படையை குவிக்கும் மணிப்பூர் அரசு – நெடுஞ்சாலையை முடக்கி நாகாலாந்து பழங்குடியினர் போராட்டம்

ணிப்பூர் மாநிலப் போக்குவரத்தின் உயிர்நாடியாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலை-2, தேசிய நெடுஞ்சாலை-53 ஆகிய சாலைகளை கடந்த எட்டு நாட்களாக நாகாலாந்த்தைச் சேர்ந்த பழங்குடியினர் அமைப்பினர் முற்றுகையிட்டுள்ளனர்.

மார்ச் 21 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நாகாலாந்தைச் சேர்ந்த தெற்கு அங்கமி பொது அமைப்பு அறிவித்ததைத் தொடர்ந்து, வணிக வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நாகாலாந்து வழியாக மணிப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

கெசோல்ட்சா/டுகோ பள்ளத்தாக்கு பகுதியில், கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்ததோடு, ஆயுதமேந்திய பாதுகாப்புப் பணியாளர்களை அப்பகுதிக்கு அனுப்பும் மணிப்பூர் மாநில பாஜக அரசாங்கத்தை எதிர்த்து இந்த முற்றுகையை தெற்கு அங்கமி பொது அமைப்பு அமல்படுத்தியுள்ளது.

‘பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், மதுக்கடைகள் திறக்கப்படும்’ –மணிப்பூர் முதலமைச்சர்

இதன் விளைவாக, மணிப்பூரில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் கொஞ்ச கொஞ்சமாக வறண்டு வருகின்றன. இருப்பினும், மருந்துகள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள மணிப்பூர் மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங், “மணிப்பூரின் எல்லைக்குள் 100 மீட்டர் தொலைவில்தான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. டுகோ பள்ளத்தாக்கின் சில பகுதிகள் மணிப்பூருக்கும் மற்ற பகுதிகள் நாகாலாந்திற்கும் சொந்தமானது. ஆனால், அங்கு செல்ல நாகாலாந்தில் இருக்கும் சாலைகளை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதால், சிலர் முழு பள்ளத்தாக்கும் நாகாலாந்திற்கு சொந்தமானது என்று கூறத் தொடங்கினர்” என்று கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்