Aran Sei

உத்திரபிரதேசத்தில் ஆரம்ப பள்ளியில் சாதிய பாகுபாடு – தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்த மாவட்ட கல்வி அதிகாரிகள்

த்திரபிரதேச மாநில மெய்ன்பூரி மாவட்டத்தில் உள்ள தவுதாப்பூர் அரசு ஆரம்பப்பள்ளியில் சாதிய பாகுபாடு நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த பள்ளியை ஆய்வு செய்த அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியை கரீம் ராஜ்புட்டை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

ஆரம்ப பள்ளியில் மொத்தம் உள்ள 80 மாணவர்களில் 60 மாணவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு மதிய உணவு வழங்க பயன்படுத்தப்படும் பாத்திரங்களை தனியாக வைத்திருந்து, அதை மாணவர்களை வைத்தே சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.

இது தொடர்பாக புகார் வந்ததை தொடர்ந்து அந்த பள்ளியில் ஆய்வு நடத்திய கல்வித் துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் கரீம் ராஜ்புட்டை பணியிடை நீக்கம் செய்ததோடு, பாத்திரங்களை தொட முடியாது எனக் கூறிய சமையலர்களை பணியில் இருந்து விடுவித்துள்ளனர்.

‘உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் நியமனம், சென்னையில் தேர்வானவர்களுக்கு காத்திருப்போர் பட்டியல்’ – ரயில்வே துறைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

பள்ளியில் சாதியப் பாகுபாடு நடைபெறுகிறது என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சபை தலைவர் மஞ்சுளாவின் கணவர் அளித்த புகாரில் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மெய்ன்பூரி மாவட்டத்தின் அடிப்படை கல்வி அதிகாரி கமல் சிங் தெரிவித்துள்ளார்.

”ஏங்களுக்கு புகார் வந்ததை தொடர்ந்து அந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு உணவு வழங்க பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் தனியாக வைக்கப்பட்டிருந்தது. அதை தொடுவதற்கு சமையல்காரர்கள் சோம்வதி, லக்‌ஷ்மி தேவி ஆகியோர் மறுத்தனர். பாத்திரங்களை தொட நிர்பந்திக்கப்பட்டால், பள்ளியில் பணிபுரிய முடியாதென தெரிவித்தனர். மேலும், சாதிய ரீதியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் நிர்வாக குழு அவர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தலித்விரோதப்போக்கை கையாளும் காவல்துறை’ – ஆதிதிராவிடர்கள் குறிவைத்து கைதுசெய்யப்படுவதாக வன்னி அரசு குற்றச்சாட்டு

கிராம சபை தலைவர் மஞ்சுளாவின் கணவர் சஹாப் சிங், “பள்ளியில் சாதிய பாகுபாடு நடைபெறுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி கூறியதை தொடர்ந்து, செப்டம்பர் 18 ஆம் தேதி அந்த பள்ளிக்கு சென்றேன். அங்குச் சமையலறையில் 10 முதல் 15 தட்டுகள் மட்டுமே இருந்தது. மற்ற தட்டுகள் எங்கே என்று கேட்டப் போது, இது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் தட்டுகள். பட்டியலின மாணவர்கள் பயன்படுத்தும் 50 முதல் 60 தட்டுகள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் சுத்தம் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பின் நான் ஊடகங்களுக்கும் கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தேன்” என கூறியுள்ளார்.

Source : Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்