கூலிக் கேட்டதற்காக பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை, அடித்து மிரட்டி தற்கொலை செய்ய வைத்த ராமதாஸ் கோர்டே என்ற நபரை மகாராஷ்ட்ரா காவல்துறை கைது செய்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, கடந்த ஆண்டு நவம்பரில், பழங்குடியினரான களு பவார், தனது மகனின் இறுதி சடங்கிற்காக ஒரு சவச்சீலை வாங்க ராமதாஸ் கோர்தேவிடம் இருந்து ரூ.500 கடன் வாங்கியிருக்கிறார். இதைத்தொடர்ந்து, கொடுக்கப்பட்ட கடனை திருப்ப பெறுவதற்காக ராமதாஸ் கோர்டே, களு பவாரை தனது வயலில் பல மாதங்கள் வேலை செய்ய வைத்துள்ளார்.
களு பவார் கூலி கேட்கும் போதெல்லாம் ராம்தாஸ் கோர்டே, அவரை அடித்து துன்புறுத்தியதாகவும், ஒருகட்டத்தில் விரக்தியடைந்த களு, இந்த மாத தொடக்கத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
களு பவாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், ராமதாஸ் கோர்டேவின்மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 374-ன் (சட்டவிரோத கட்டாய தொழிலாளர்) கீழும், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
Source: ANI
தொடர்புடைய பதிவுகள்:
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.