Aran Sei

மகாராஷ்டிரா கோவில்களில் அனுமான் சாலிசா பாடுவதற்கு ஒலிப்பெருக்கிகள் – இலவசமாக வழங்க முன்வந்துள்ள பாஜக தலைவர்

Credit; The Quint

காராஷ்டிராவில் உள்ள கோவில்களில் அனுமான் சாலிசா பாடுவதற்கு ஒலிப்பெருக்கிகளை இலவசமாக வழங்க தயார் என கோடீஸ்வர வியாபாரியும் பாஜகவின் அரசியல் பிரமுகர்களில் ஒருவருமான மோஹித் கம்போஜ் தெரிவித்துள்ளார்.

கோவில்களில் ஒலிப்பெருக்கிகளை இலவசமாக பொருத்த யார் வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். அனைத்து இந்துக்களும் ஒரே குரலில் இருக்க வேண்டும். ஜெய் ஶ்ரீராம்! ஹர ஹர மகாதேவ்!” என அவர் கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது – கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

மசூதிகளுக்கு வெளியில் இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவில் தலைவர் ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ராஜ் தாக்ரேவின் கோரிக்கைக்கு பிறகு அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் ஒலிப்பெருக்கிகளை வைத்து ஹனுமான் சாலிசா வாசித்தனர்.

மும்பை முனிசிபல் கார்பரேஷனுக்கு (பிஎம்சி) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் சிவசேனாவை எதிர்கொள்ளும் விதமாக பாஜக மற்றும் எம்.என்.எஸ் கட்சிகள் இந்த விசயத்தை கையில் எடுத்துள்ளன.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க கோரி மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

பாஜக மற்றும் எம்.என்.எஸ் கட்சிகளை விமர்சித்துள்ள சிவ சேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், “மசூதிகளுக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற ராஜ் தாக்ரே கோரிக்கை விடுத்துள்ளார். முதலில், பாஜக ஆளும் எந்த மாநிலத்தில் அஸான் நிறுத்தப்பட்டது, மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டது என்பதை பார்க்கட்டும்.  இது மகாராஷ்டிரா, சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.” என கூறியுள்ளார்.

Source: NDTV

ராமராஜ்ஜியம் எனும் ஆபத்து குறித்து பேசுகிறார் மருத்துவர், சமூகச் செயற்பாட்டாளர் காந்தராஜ். 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்