பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நர்மதா நதியின் கரைகளிலும் படித்துறைகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் கோரியுள்ளார்.
இந்துக்கள் அல்லாதவர்கள் காலணி மற்றும் செருப்புகளை அணிந்துகொண்டு நதியின் புனிதத்தை மாசுபடுத்துவதாக இந்து அமைப்பான இந்து தர்ம சேனாவின் மாநிலத் தலைவர் யோகேஷ் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
“அவர்கள் படித்துறைகளில் அமர்ந்துக்கொண்டு, நர்மதையில் குளிக்கும் இந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை அநாகரீகமான பேசுகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால், ஜபல்பூரில் உள்ள அனைத்து நர்மதா நதிக்கரைகளிலும் படித்துறைகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தை கோருகிறோம்” என்று யோகேஷ் அகர்வால் வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளார்.
ஜிலேஹரி படித்துறை பகுதியில் செருப்புகளை அணிந்து ஆற்றில் குளித்ததற்காக சில சிறுவர்களும் இளைஞர்களும் சிலர் விரட்டி சென்று குச்சியால் அடிக்கும் சம்பவத்தை காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, யோகேஷ் அகர்வால் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜிலேஹரி படித்துறையில் இந்துக்கள் அல்லாத சிலர் அசைவ உணவை சமைப்பதாக வதந்திகள் வந்தது எனவும், ஆனால் அங்கு சென்றபோது அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை எனவும் ஜபல்பூரில் காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களுடன் யாரும் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் உறுதிமொழி எடுக்கும் காணொளி அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Source: New Indian Express
One Year Of DMK சாதனையா? சறுக்கலா? Ve Mathimaran Interview
https://www.youtube.com/watch?v=icbZkPvsnnE&feature=emb_title
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.