Aran Sei

கர்நாடகா: பள்ளிப் பாடத்தில் திப்பு சுல்த்தான் – சில பகுதிகளை நீக்க மறு ஆய்வுக் குழு பரிந்துரை

ர்நாடக அரசு அமைத்த பள்ளிப்பாடத்திட்டம் குறித்த மறுஆய்வுக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ‘திப்பு சுல்தானின் புனிதப்படுத்தப்பட்ட வரலாற்று அம்சங்களைத் தவிர்க்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை கல்வித்துறை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், வரும் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் திப்பு சுல்தான் குறித்த பாடப்பகுதிகளில் மாற்றங்கள் செய்து அமல்படுத்தப்படும்.

திப்பு சுல்தான் பற்றிய அத்தியாயங்களை முழுவதுமாக தவிர்க்குமாறு ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாக பொய் செய்திகள் பரவி வந்த நிலையில், அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் நேற்று (மார்ச் 25) அச்செய்தியை நிராகரித்துள்ளார். திப்பு சுல்தான் குறித்த அத்தியாயங்கள் நீக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

விளையாட்டு மைதானத்திற்கு திப்பு சுல்தானின் பெயர் வைத்ததாக கூறி பாஜக போராட்டம் : போராட்டக்காரர்களை கைது செய்த காவல்துறை

“எதிர்கால சந்ததியினருக்குச் சொல்ல வேண்டிய சில வரலாற்றுச் சம்பவங்கள் உள்ளன. சொல்லப்படாத பல வரலாறுகளை சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. கடந்த காலத்தில் செய்த தவறுகளை சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் இங்கு எந்த அரசியலையும் கலக்கவில்லை” என்று பி.சி.நாகேஷ் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கர்நாடக மாநில தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வித் துறையால் மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. கர்நாடக மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினரான ரோஹித் சக்ரதீர்த்தா இக்குழுவிற்கு தலைமை தாங்கினார். அக்குழு அமைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்