பெங்களூருவைச் சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றில், சீக்கிய மாணவியின் தலைப்பாகையை அகற்றக் கோரிய கல்லூரி நிர்வாகத்திற்கு சீக்கிய அமைப்புகளும் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இச்செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலையிட வேண்டும் என்றும் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலி தளம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி, “சீக்கியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கள் தலைப்பாகையைக் கழற்ற நிர்ப்பந்திக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான முடிவு. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. யாரையும் தலைப்பாகையைக் கழற்றுமாறு வற்புறுத்துவது சீக்கிய மரபுகள் மற்றும் கொள்கைகளை மீறும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையீட வேண்டும் என்றும் இந்த கொடூரமான செயலை செய்தவர்கள் மீது கர்நாடக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சீக்கியர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், நாட்டிற்கு சீக்கியர்கள் ஆற்றிய பங்களிப்பை நினைவூட்டுமாறும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி கடிதம் எழுதியுள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.