Aran Sei

கர்நாடகாவில் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக புகார் – பட்டியல் சாதியினரைத் தாக்கிய வலதுசாரியினர்

ர்நாடகா-மகாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் 2021 டிசம்பர் 29 அன்று பக்கத்து வீட்டுக் காரர்களையும், பிற கிராம மக்களையும் கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி,  மோசடியின் மூலம் கட்டாயமாக மதம் மாற்றுவதற்காக ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பைபிள் பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்ததாக வலதுசாரியினர் குற்றம் சாட்டியதோடு அக்குடும்பத்தைத் தாக்கியதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது
தாக்குதல் நடத்திய வலதுசாரியினரில் 5 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 326 (ஆபத்தான வழிகளில் கடுமையான காயம் ஏற்படுத்துதல்), 354 (பெண்களின் அடக்கத்தைச் சீர்குலைத்தல்) மற்றும் 392 (கொள்ளை) மற்றும் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் காவல்துறை இன்னும் யாரையும் கைது செய்யவில்லை.
அக்ஷய்குமார் காரகன்வி என்ற கிறிஸ்தவ மத போதகர் தனது இல்லத்தில் வருடாந்திர பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 7 பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்து இந்த பிரார்த்தனைக்கு இடையூறு விளைவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸின் கூறப்பட்டுள்ளது.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தின் பெண்களைத் தொழில்முறை பாலியல் தொழிலாளர்கள் எனவும், ஆண்களைத் தொழில்முறை பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் எனவும் வலதுசாரி அமைப்பினர் வசைபாடி அடித்ததாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது
“நீங்கள் கழிவறை சுத்தம் செய்பவர்கள் மற்றும் செருப்பு தைப்பவர்கள் என்று எங்களை சாதிரீதியாக இழிவாகப் பேசினார்கள். இந்து மதத்தில் பிறந்த நீங்கள் இந்துமத நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறீர்கள்” என்று காவல்துறை அதிகாரிகளிடம்  அக்ஷய்குமார் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் கர்நாடகாவின் சில பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த டிசம்பர் 28 அன்று, துமகுருவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வீட்டிற்குள் இந்துத்துவாவினர்  நுழைந்து தாக்குதல் நடத்தியதாக நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, 2021 டிசம்பரில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசாங்கம் “மதமாற்ற எதிர்ப்பு” மசோதாவை நிறைவேற்றிய பிறகு, இதுபோன்ற தாக்குதல்கள் கர்நாடகாவில் அதிகரித்துள்ளதாகவும் இச்சட்ட மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன என்றும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சமூகத்தின் மீது 37 தாக்குதல்கள் நடந்ததாக இவாஞ்சலிகல் பெல்லோஷிப் ஆஃப் இந்தியா கூறுகிறது.இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் பதிவாகியுள்ள மாநிலங்களில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கம் தெரிவித்துள்ளது.
Source : TheWire
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்