Aran Sei

‘இது எங்கள் காஷ்மீர், நீங்கள் வெளியிலிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்று பேசிய பெண் காவலர் – உபா சட்டத்தில் கைது

Image credit : businessinsider.in

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் குறித்து பேசியதாகப் பெண் சிறப்பு காவல் துறை அதிகாரி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்தில், பயங்கரவாதத்தை புகழ்ந்ததாகவும், தேடுதல் பணியைத் தடுத்ததாகவும் கூறிப் பெண் சிறப்பு காவல் துறை அதிகாரி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

“நீங்கள் எங்கள் இதயத்தில் நிறைந்துள்ளீர் விவேக்” – அரசியல் ஆளுமைகள், திரைக்கலைஞர்கள் இரங்கல்

சைமா அக்தர், சிறப்பு காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிசல் பகுதியைச் சேந்தவர்.

கடந்த புதன்கிழமை, அவர் வசிக்கும் பிரிசல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கு  பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது சைமா அக்தர் பயங்கரவாதத்தை புகழ்ந்ததாகவும், தேடுதலை தடுத்ததாகவும் கூறி யூ.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பணம், மதுபானம் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்

மேலும், தேடுதல் வேட்டையை தனது தொலைபேசியில் அவர் பதிவு செய்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பெண் வெளியிட்டுள்ள காணொளியில் , “நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் வருகிறீர்கள்? போராளிகள் இருக்கும் வீடுகளுக்குச் செல்லுங்கள். எங்கள் சேஹ்ரி (ரம்ஜானின் போது விடியற்காலையில் உணவு) உணவைக் கூட எடுத்துக்கொள்ள நீங்கள் எங்களை அனுமதிக்கவில்லை… நீங்கள் எங்கள் வீட்டில் சோதனை இடவேண்டுமானால்,னது தாய்க்கு உடல்நிலை சரியில்லை முதலில் உங்கள் காலணிகளை அகற்றுங்கள் ” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

மேலும்,”இது எங்கள் காஷ்மீர். நீங்கள் வெளியிலிருந்து வந்திருக்கிறீர்கள்” என்றும் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்துள்ளார், இந்நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

source: the hindu 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்