Aran Sei

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவை கொண்டாடிய பாஜக : துக்க தினமென மெஹபூபா முக்தி போராட்டம்

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்ட  நாளின் இரண்டாம் ஆண்டு நிகழ்வை   [ஆகஸ்ட் 5] அம்மாநில பாஜகவினர் கொண்டாடியுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வைக் கொண்டாடும் வகையில்  பாஜகவினர் பேரணியாகச் சென்றுள்ளனர்.  அதில் ஒன்று கத்றா பகுதியில் முன்னாள் அமைச்சர் அஜய் நந்தா தலைமையிலும் நடந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, பிரிவு 370ஐ நீக்குவதற்கான கட்சியின் செயல்பாடுகள்குறித் ஆவணப்படத்தை  கட்சியின் தலைமை அலுவலகத்தில்  திரையிட்டும்  உள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து  பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு  எதிராக  மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் தேசிய மாணவர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முக்தி தலைமையில் நடந்த போராட்டத்தில், ஆகஸ்ட் 5  ஐ கருப்பு தினமெனக்  கூறியும், அம்மாநிலத்தில் நடக்கும்  கைதுக்கு எதிராக பதாகைகளை கைகளில்  ஏந்தியும்   பேரணியாகச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள மெஹபூபா முக்தி,”பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடைக்கப்பட கடைகளையும்  பாஜகவினர்  வற்புறுத்தி திறந்துள்ளனர்.காஷ்மீரில்  நடக்கும் உண்மைகளை  எத்தனை நாட்களுக்குத் தான்  அரசு மறைக்க முடியும் ” என்றும் கூறியுள்ளார்.

SOURCE;GREATER KASHMIR

தொடர்புடைய பதிவுகள்; 

ஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்ட், அரசு வேலை பாதுகாப்பு அனுமதிக்கு புதிய கட்டுப்பாடு – ஜம்மு காஷ்மீர் குற்றவியல் புலனாய்வு துறை அறிவிப்பு

பெகாசிஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் – ஆதாரங்கள் அம்பலம்

‘வளர்ப்பு மிருகங்களை பலியிடத் தடை’ – எதிர்ப்புகள் வலுத்ததால் ‘ஆலோசணை’ எனப் பின்வாங்கிய ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்