Aran Sei

நாட்டின் 146 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா – மத்திய சுகாதாரத்துறை செயலர்

ந்தியாவில் கொரோனா பரவும் வேகம், 146 மாவட்டங்களில் 15% ஆகவும், 274 மாவட்டங்களில் 5-15% ஆகவும் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10,000 பேரில் 2-4 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வாமை உள்ளவர்கள் கோவிஷீல்ட் மருந்தை எடுக்கக்கூடாது: சீரம் இந்தியா நிறுவனம்

இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை செயலர், 146 மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி வருவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த கட்ட கொரோனா தடுப்பூசி போடுதல் வரும் மே 1 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் 15 நாட்களுக்கு முன்பாகவே மாநில அரசுகள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தனியார் மருத்துவ மனைகளில் போடப்படும் தடுப்பூசியின் விலை கண்காணிக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் எது சிறந்தது?- உண்மையான அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

கடந்த ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் படி, கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் முறை போட்டுக் கொண்ட 10.03 கோடிபேரில் , 0.02 சதவீதம் (17,145) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முறையும் செலுத்திக்கொண்ட 1.57 கோடி பேரில், 0.03 சதவீதம் (5,014) மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆல்கஹாலால் கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்குமா? – கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு

இதே போன்று கோவாக்ஸின் முதல் தடவை செலுத்திக் கொண்ட 93.56 லட்சம் பேரில், 0.04 (4,208) பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ; இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 17.37 லட்சம்பேரில் , 0.04 சதவீதம் (695) பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்