Aran Sei

இரண்டு ஆண்டுகளில் 157 காவல் நிலைய மரணங்கள் – குஜராத் அரசு தகவல்

டந்த இரண்டு ஆண்டுகளில் 157 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

லாக் அப் மரணங்களில் 70 சதவீதம் விளிம்புநிலை மக்களே – மனித உரிமை அமைப்பு

குஜராத் சட்டசபையின் கேள்வி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நிரஞ்சன் படேல் கேட்ட கேள்விக்குக் குஜராத் அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 70 பேரும் , 2020 ஆம் ஆண்டு 87 பேரும் ஆக மொத்தமாக 157 பேர் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் உயிரிழந்திருப்பதாகக் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

‘பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்’ – உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்தச் சம்பவத்திற்கு காரணமான 5 காவல் அதிகாரிகள் , 4 காவலர்கள் பனி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் , 5 அதிகாரிகள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில் 2.5 லட்சம் ரூபாய்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது என்று குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.

SOURCE; THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்