“40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கோவா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 24 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளனர், இதன்மூலம் இந்திய ஜனநாயக வரலாற்றில் ‘இணையில்லாத’ சாதனையைக் கோவா படைத்துள்ளதாக” என்று ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“2017 கோவா சட்டமன்ற தேர்தலில் 17 இடங்களை வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 13 இடங்களைப் பெற்ற பாஜக, சில சுயேச்சைகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததாலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்குத் தாவியதாலும் பாஜக 27 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸில் வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதன்பின் எஞ்சியிருந்தனர்” என்று பிடிஐ தெரிவித்துள்ளது
கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.