Aran Sei

டெல்லி சிறையில் 190 கைதிகளுக்கு கொரோனா தொற்று – இடநெருக்கடியால் கைதிகளுக்கு பரவும் அபாயம்

சியாவின் மிகப்பெரும் சிறைச்சாலைகளான திஹார், மண்டோலி, ரோகினி ஆகிய மூன்று சிறைச்சாலைகளில் 190 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போன்று 304 சிறைத்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது 11 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டும் அமெரிக்க இணையதளம் – பாஜக ஆதரவாளர்களின் செயல்திட்டமென ஆய்வில் அம்பலம்

கடந்த சில வாரங்களில் டெல்லி சிறைகளில் கொரோனா தொற்று இருந்ததை விட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.

டெல்லி சிறையில் 20,000 சிறைக்கைதிகளில் உள்ளதாகவும், கடந்த ஆண்டு அவர்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் சென்ற ஆண்டு 5000 பேர் நிபந்தனை பரோலில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளாவில் சிறப்பு காவலர்களாக ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் – நியமித்தது உத்தரகண்ட் காவல்துறை

கொரோனா பாதிக்கப்பட்ட 190 கைதிகளில் 121 பேர் குணமடைந்துள்ளதாகவும், 67 பேர் சிகிச்சை பெற்று உள்ளதாகவும், 2 பேர் இறந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்