Aran Sei

அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஜனநாயகத்தின் வேர்கள் பலவீனமடையும் – ஊழல் வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு நிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 21 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

2020-ம் ஆண்டில் பெண் ஒடுக்குமுறை தொடர்பாக 80,000 வழக்குகள் – ராஜஸ்தான் அரசிற்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கடந்த 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் சொந்தமான நிலத்தைப் போலி ஆவணங்கள்மூலம் விற்ற அரசு அதிகாரிகள் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின் ஊழல் தடுப்பு பிரிவுச் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு 21 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான குற்றத்திற்கு ஆன்லைன் வகுப்புகளும் காரணம் – ராஜஸ்தான் காவல் கண்காணிப்பாளர்

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 அதிகாரிகள் உயிரிழந்த நிலையில் மீதானமுள்ள நால்வருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது கூறிய நீதிபதி, “அரசு அதிகாரிகளே ஊழல் செய்தால் ஜனநாயகத்தின் வேர்கள் பலவீனம் அடையும் ,அது நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும் ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

source; THE NEW INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்