Aran Sei

செம்மஞ்சேரி,பெரும்பாக்கம் பகுதிக்கு துரத்தப்பட்ட சென்னை மக்கள் வாக்களிப்பதில் சிக்கல் – ஆவணங்களில் முகவரி மாற்றிதராததால் நிலவும் அவலம்

டந்த நான்கு ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் என்பதன் பெயரில்  சென்னை நகரிலிருந்து புறநகர் பகுதியான செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய மாற்று இடங்களுக்கு அனுப்பட்ட மக்களுக்கு ஆவணங்களில் முகவரி மாற்றிதராததாலும், போதிய பேருந்து வசதிகள் இல்லாததாலும் வாக்களிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு மக்கிஸ் கார்டன் பகுதி தொடங்கி கடந்த நான்கு ஆண்டுகளில் பல்லவன் நகர், சிந்தாதரிபேட்டை, அன்னை சத்திய வாணிமுத்து நகர் ஆகிய பகுதிகளில் வசித்த மக்கள்  அப்பகுதியிலிருந்து  அப்புறப்படுத்தப்பட்டு   சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் தற்போது  செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசால் வழங்கப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

“ஒரு பக்கம் போராட்டம் செய்கிறோம்; மறுபக்கம் எங்கள் வீடுகளை இடிக்கிறார்கள்” – கூவம்கரை மக்கள்

தற்போது செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களின் ஆவணங்களில் பழைய முகவரியே இடம் பெற்றிருப்பதால் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சோளிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில்,  அவர்கள் முன்பு வசித்த சென்னை பகுதிகளில் வாக்களிக்க விரும்பினாலும் அங்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் ஜனநாயக கடமையாற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதுகுறித்து அரண்செய் இடம் தெரிவித்த சமூக செயல்பாட்டாளர் இசையரசு அம்பேத்கர், “கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னையிலிருந்து செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்திற்கு அப்புறப்படுத்தபட்ட சென்னை மக்களுக்கு அரசானது சிறப்பு முகாம்கள் வழியாக ஆவணங்களில் முகவரியை மாற்றித் தந்திருக்க வேண்டும், ஆனால், அவ்வாறு செய்து தரப்படாததால் வாக்களிப்பதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், மக்களின் ஆவணங்களில் பழைய முகவரியே உள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள்  பல்லவன் நகர், சிந்தாதரிபேட்டை, அன்னை சத்திய வாணிமுத்து நகர் ஆகிய தென்சென்னை பகுதிகளுக்கு சென்று வாக்களிக்க இயக்கப்படும் பேருந்துகளும்  போதுமான அளவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் வடியாத வெள்ளம் – தத்தளிக்கும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு மக்கள்

முகவரி மாற்றுவதில் உள்ள சிக்கல்குறித்து தெரிவித்த இசையரசு அம்பேத்கர், “இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு முகவரியை மாற்றச் செல்லவேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டு நாள் தங்களது உழைப்பை விட வேண்டி இருப்பதால் அன்றாடம் தங்கள் பிழைப்புக்காகவே உழைக்கும் மக்களுக்கு எதிரான சமுக சிக்கலாக உள்ளது”  என்றும்  கூறியுள்ளார்.

வேலைக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 280% உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மேலும், “செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மக்களுக்கு அரசு சிறப்பு முகாம்கள் வழியாக எல்லா ஆவணங்களிலும்  முகவரியை மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி சென்னையை விட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டால் அவர்களுக்குச் சென்னை நகரத்திற்குள் இடம் அளிக்கப்பட வேண்டும். மேலும், இவ்வாறு குறிப்பிட்ட மக்கள் பிரிவினரை சென்னை நகரிலிருந்து வெளியேற்றுவது நவீன தீண்டாமை, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்றும் செயல்பாட்டாளர் இசையரசு அம்பேத்கர் அரண்செய் இடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்