Aran Sei

வைரச்சுரங்கத்திற்காக வனத்தில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்கள் – இணையத்தில் பரவும் எதிர்ப்புக் குரல்

த்திய பிரதேச மாநிலம் புஸ்வாஹா வனப்பகுதியில் வைரச் சுரங்கத்திற்காக மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் ‘புஸ்வாஹா வனத்தைக் காப்பற்றுவோம்’ என்ற முழக்கம் பரவிவருகிறது.

புஸ்வாஹா வனப்பகுதியில் வைர சுரங்கத்திற்காக 2.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் புஸ்வாஹா வனத்தைக் காப்பாற்றுவது குறித்த முழக்கங்கள் வைரல் ஆகிவருகிறது.

முதுமலை வனச்சரகத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பெண் புலி – இருவர் கைது

இதுகுறித்து ‘இன்னும் காலதாமதம் ஆகவில்லை (ITSNOT_TOOLATE)’ என்ற அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், 62 ஹெக்டேர் நிலப்பரப்பு வைரசுரங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 382.131 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசின் கணக்குப்படி 2,15,875 மரங்கள் வெட்டப்படவுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள மற்றோர் பதிவில்,”ஒரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் வேளையில், மறுபுறம் சாட்டார்புர் புஸ்வாஹா வனப்பகுதியில் 2 லட்சம் மரங்களை வெட்ட அரசு அனுமதியளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ அமைப்பு, 1 மரத்தின் விலை 74,500 ரூபாய் என்றால், 2.15 லட்சம் மரங்களின் விலை 16,017500,000 ரூபாய் என்றும், மத்தியபிரதேசத்தின் நுரையீரலாக இருக்கும் வனம் அளிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்