Aran Sei

‘நீங்கள் ஓட்டுக்காக மட்டும் தான் எங்களை கண்டுகொள்வீர்களா?’ – அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பிய உயிரிழந்தவரின் மகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவனையில் தன் தந்தையை மருத்துவர்கள் பரிசோதிக்காததால் மருத்துவமனை வாயிலிலேயே உயிரிழந்துள்ளார் என்று கூறி இறந்தவரின் மகள் மருத்துவமனை வாயிலிலேயே மருத்துவமனையின் அலட்சிய போக்கு குறித்து குரலெழுப்பியுள்ளார்.

மருத்துவமனை வாயிலில் இறந்த தந்தையின் உடலோடு அந்தப் பெண் கதறும் காணொளியும் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இருந்து ஜார்கண்டிற்கு 7 மாதம் நடந்தே பயணித்த தொழிலாளர் – ஊரடங்கும் வேலையிழப்புமே காரணம்

அந்தப் பெண் மருத்துவமனை வாயிலில் தன் தந்தையின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பும் வேலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அங்குள்ள கொரோனா வார்டை பார்வையிட வந்திருந்தார்.

அந்தப் பெண்ளியில் , 1 மணிநேரத்துக்கும் மேலாக ஆம்புலன்ஸிலேயே காத்துக்கிடந்ததாகவும், ஒருவரும் தந்தையை பார்க்கவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் மோசமான நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

’அல்கொய்தா தொடர்புக்கு ஆதாரம் எங்கே’ – ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் கேள்வி

மேலும், அப்போது அங்கிருந்த அமைச்சர்குறித்து கேள்வி எழுப்பிய அந்தப் பெண், ” அமைச்சரால் என் தந்தையின் உயிரை தர முடியும ? நீங்கள் ஓட்டுக்காக மட்டும்தான் எங்களைக் கண்டுகொள்வீர்களா ? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இறந்தவரின் பெண் தன் தந்தையின் சிகிச்சைகாக 100 கிலோ மீட்டர் பயணித்து ஹசாரிபாக் பகுதியிலிருந்து ராஞ்சி மருத்துவமனைக்கு வந்திருந்தார், இந்நிலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாகச் சிகிச்சை அளிக்கப் படாத நிலையில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார்.

source; the indian express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்