Aran Sei

கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை – பீகார் நீதிமன்றம் உத்தரவு

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் தாய் மற்றும் அவரது மகளின் மீது கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒன்பது நபர்களுக்கு  கயா மாவட்ட நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்- வைகோ

கடந்த ஜூன் 13,2018 அன்று கோன்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோந்திக்கா பகுதியில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் கணவனை மரத்தில் கட்டி வைத்து விட்டு  அவரது மனைவி , 15 வயது மகளின் மீது   கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது.

இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் ஒன்பது பேர் மீதும் பாலியல் வன்கொடுமை சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வன்கொடுமை வழக்கை விசாரிக்கவில்லையென குற்றச்சாட்டு : ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பணியிட மாற்றம்

இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, அந்த ஒன்பது நபர்களுக்கும் வாழ்நாள் சிறை தண்டனையும் ,தலா 15,000 அபராதமும் விதித்து கயா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SOURCE : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்