Aran Sei

கொரோனா தொற்றால் 1400 பேர் உயிரிழப்பு – பெங்களூருவில் நிறைந்து வழியும் பிணவறைகள்

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் 1812 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 971 பேர் கொரோனா பாதிப்பினால் இறந்ததே அந்நகரின் அதிகபட்சமாக இருந்த நிலையில், கடந்த மாதம் 1812 மரணமடைந்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் 1479 பேர் இறந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா உயிர்காக்கும் மருத்துவ வசதிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க வேண்டும் – சஞ்சய் ரவுட் வேண்டுகோள்

இந்நிலையில், இறந்தவர்களைத் தகனம் செய்யமுடியாத அளவுக்கு மயானம் நிறைந்து வழிவதாகவும், இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்கள் மயானத்தை விட்டு மீண்டும் பிணவறைக்கே திரும்ப எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இதைத்தொடர்ந்து சில மருத்துவமனை நிர்வாகங்கள் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல்களை ஒருநாளைக்கும் மேல் பிணவறையில் வைக்க இயலாது என்று தெரிவித்துள்ளது. முன்னர் 3 முதல் 7 நாட்கள் அடையாளம் தெரியாத உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் நலனுக்காக இலவசமாக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர் – மனிதம் வாழட்டும்

மேலும், அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையாலும், குறைந்த அளவிலான பிணவறையாலும் ஆம்புலன்ஸில் இறந்தவர்களின் உடலை இறுதி சடங்குக்கு எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்