Aran Sei

வருகின்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 6 மாநிலங்களில் போட்டியிடும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Image Credits: PTI

த்தரப் பிரதேசம், உத்தரக்கண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் களம் காணப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின்  தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ஒன்பதாவது தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியையும் தாண்டி எங்கள் கட்சியின் உள்கட்டமைப்பை பல்வேறு மாநிலங்களில் விரிவுப்படுத்த எண்ணுகிறோம். அதனால்  உத்தரப் பிரதேசம், உத்தரக்கண்ட், உள்ளிட்ட  ஆறு மாநில மக்களின் மன நிலையைப் புரிந்துக்கொள்ள அவர்களிடம், எங்கள் கட்சிக்கு வாக்களிப்பீர்களா என்று கேட்டபோதுதான், ஆம் ஆத்மி கட்சியின் தீவிர அரசியல் செயல்பாடுகள்குறித்து அம்மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்தோம். ஆகையில் அப்பகுதிகளில் கட்சியை வலுப்பெறச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.” என அவர் தெரிவித்ததாக தி இந்து  குறிப்பிட்டிருந்தது.

கடலூரில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – 4 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் தீர்ப்பு

மேலும், “டெல்லியில் கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம்குறித்து விசாரிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் கூறியதாகத் தி இந்து  தெரிவித்துள்ளது.

’பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரையை புறக்கணிப்போம்’ – விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

தொடர்ந்து அவர் பேசுகையில், “டெல்லி மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்படி பல மக்கள் நலத்  திட்டங்கள் டெல்லியில் அமலில் உள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வை அந்த மாநில மக்களுக்கும் கொண்டு சேர்க்க, தெருக்கள் தோறும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கட்சியின் கட்டமைப்பை அந்தப் பகுதிகளில் வளர்த்தெடுக்க முடியும்.” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததை தி இந்து  தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்