Aran Sei

அமெரிக்க பொருளாதாரத்திற்கு சட்டவிரோத குடியேறிகளின் பங்கு – இரண்டாம் இடத்தில் இந்தியர்கள்

மெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறிய, 50 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள், ஆண்டிற்கு $15.5 பில்லியன் டாலர் செலவு செய்யும் திறன் பெற்று இருக்கிறாரர்கள் என்று, அமெரிக்கன் சிந்தனை மையம் (think tank ) தகவல் வெளியிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்முலம் அரசுக்கு $2.8 பில்லியன் அமெரிக்கா டாலர் வரியாகக் கிடைக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு அதிகரிப்பு

அந்த சிந்தனை மையம் வெளியிட்டிருந்த 2019 ஆம் ஆண்டின் அறிக்கையோடு, தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையை ஒப்பிடுகையில், ஆவணங்களற்று குடியேறியவர்களில், அமெரிக்க பொருளாதரத்திற்கு பங்களிப்பதில், இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் இருபபது தெரியவந்துள்ளதாக தி வயர் செய்தி செய்தி கூறுகிறது.

அமெரிக்காவில், முறையான ஆவணங்களற்ற குடியேறிகள் ஒரு கோடிக்கும் மேல் உள்ளதாகவும், இவர்களில் 42 லட்சபேர், மெக்ஸிகோ நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கை கூறுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தைகளின் செயல்திறன் மேம்படுத்தப்படும் – விவசாய சட்டங்கள் குறித்து அமெரிக்கா கருத்து

மேலும், மெக்ஸிகோவிற்கு அடுத்து முறையான ஆவணங்களற்ற குடியேறியவர்களில், எல் சால்வடோர் இரண்டாம் இடத்தையும், இந்தியா மூன்றாம் இடத்தையும் வகிப்பதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தாய்வானுக்கு மேல் பறந்த சீன போர் விமானங்கள் – “அமெரிக்காவுக்கு எச்சரிக்கை”

இந்தியர்கள் மூன்றாம் இடம் வகித்தாலும், பொருளாதார பங்களிப்பின் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிப்பதாக சிந்தனை மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்